Thursday, 1 May 2025

 நேற்று என் வாழ்வில் மிக பெரிய அதிர்ஷ்டமயமான ஒரு நாள். காலையில் சங்கரா டிவி மூலம் காஞ்சியில் ஸ்ரீ  சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் காஞ்சி மடத்தின் புது பீடாதிபதியாக வேதசாஸ்திரங்கள் மற்றும் பல ஸம்ப்ரதாயங்கள் முறைகள்படி நியமனம் பெற்றதய் காணும் பாக்கியம் பெற்றேன்.

இந்த இளம் வயதில் அவர் உலகம் மற்றும் குடும்ப பந்தக்களைகளை எல்லாம் களைந்துவிட்டு ஒரு சந்நியாசியாக பொறுப்பு ஏற்றது மிக்க ஒரு தியாகம் .

அதே சமயத்தில் அவருடைய தாயார் தான் பெற்று வளர்த்த ஒரு வாலிப வயது மகனை ஒரு மிக பெரிய பொறுப்பை ஏற்க குடும்பத்திலிருந்து விடுவித்தது மிக அரியதொரு தியாகம் ஆகும். அந்த தாயரும் மற் ற குடும்பத்தினரும் மிகவும் போற்ற தக்கவர்கள்.

No comments:

Post a Comment